ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
X

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தலைமையில் பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இன்று (11ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இன்று (11ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் இன்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் தொழிலில் உறுதுணையாக இருக்கக்கூடிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்து கொண்டாடப்படுவது வழக்கம்.


அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியக் கூடிய ஓட்டுநர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் தங்களது வாகனத்தை கழுவி சுத்தம் செய்து, அதற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்து, வாழைமரம் கட்டியும், ஸ்ட்ரெச்சர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்து தேங்காய் பழம் உடைத்து இறைவனை வேண்டி வழிபாடு செய்தனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களுக்கு பூ மாலை அணிவித்து, பொரி, வாழைப்பழம் படைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.


இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர். மேலும், எந்த பிரச்சனையும் இன்றி நாள் தோறும் வாகனங்கள் நன்றாக ஓட வேண்டும் என இறைவனை வேண்டி பூசணிக்காயில் சூடம் ஏற்றி வாகனங்களுக்கு திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைத்தனர்.

Tags

Next Story
Similar Posts
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி  பயங்கர விபத்து
மாறி வரும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் புற்று நோய்
அலட்சியப்படுத்த வேண்டாம்: இவை கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள்
நடுக்குவாதம் எதனால் ஏற்படுகிறது? அதனை குணப்படுத்த எடுக்கும் சிகிச்சை முறை
மஞ்சள் காமாலை நோயை  குணப்படுத்த உதவும் கீழா நெல்லி இலை சாறு
வானத்தின் அழகிய வண்ணங்கள்! நம்ம ஊர்ல இதென்ன அதிசயம்!
என்னங்க நடக்குது? திருச்சி வானில் 1 மணி நேரமாக வட்டமிடும் விமானம்..!
ரத்தன் டாடா ஏன் உலகப் பணக்காரர்  பட்டியலில் இல்லை?
முதுமையில் மூளை சிறப்பாக இயங்க மூளை நரம்பியல் நிபுணர் கூறும் யோசனைகள்
ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
SPAM கால்களால் எரிச்சலடைகிறீர்களா? ஏர்டெல்லின் சூப்பர் AI ஐடியா!
ரத்தன் டாடாவுக்கு பிடித்த உணவுகள் என்ன தெரியுமா..?
அதிசய புகைப்படம்...! கருந்துளையுடன் மோதும் நட்சத்திரம்! கண்முன்னே  அரிய நிகழ்வு..!