நடப்பாண்டில் ஈரோட்டில் முதல்முறையாக 107.6 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு

நடப்பாண்டில் ஈரோட்டில் முதல்முறையாக 107.6 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
X

Erode news- வாட்டி வதைக்கும் வெயில் (மாதிரி படம்)

Erode news- நடப்பாண்டில் ஈரோட்டில் முதல்முறையாக நேற்று (7ம் தேதி) 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Erode news, Erode news today- நடப்பாண்டில் ஈரோட்டில் முதல்முறையாக நேற்று (7ம் தேதி) 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் கோடை காலம் தொடங்கும் நிலையிலேயே இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்று மக்கள் பேசும் அளவுக்கு வெயில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே ஈரோட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்சமாக 107.6 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவானது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்லவும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதை போல் இருந்ததாகவும், பகல் நேரத்தில் தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 2 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போதே வெயிலின் தாக்கம் 108 டிகிரியாக இருக்கும் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் வரவிருக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business