பெருந்துறையில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெருந்துறையில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

பெருந்துறையில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு எம்எல்ஏ ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன்பின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் அண்ணா திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வந்து பெருந்துறை நால்ரோட்டில் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், விஜய் (எ) ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ சி.பொன்னுதுரை, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவி சாந்தி, மாவட்ட துணைச் செயலாளர் மைதிலி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, எம்ஜிஆர் இணைச் செயலாளர் திங்களூர் கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், மாவட்ட பேரவை துணைச்செயலாளர் பிரபாகரன், மகளிர் அணி செயலாளர் உமா, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி உறுப்பினர் பரிமளா ரஞ்சித், பெருந்துறை பேரூராட்சி உறுப்பினர் வளர்மதி அருள்ஜோதி, பெருந்துறை பேரூர் கழகச் கல்யாணசுந்தரம், மகளிர் அணி மோகனாம்பாள் மற்றும் அண்ணா திமுக அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!