அந்தியூர் அருகே பணம் வைத்து சூதாட்டம்: 10 பேர் கைது
Erode news, Erode news today- அந்தியூர் அருகே பணம் வைத்து சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வெள்ளித்திருப்பூர் - பட்லூர் சாலையில் பெருமாள் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். மொத்தமாக 10 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ஜம்பை நல்லிபாளையத்தைச் சேர்ந்த தர்மன் (வயது 41), சின்னச்சாமி (வயது 45), பவானி கொளந்தபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 45), அந்தியூர் செம்புளிச்சாம்பாளைத்தைச் சேர்ந்த முனுசாமி (எ) ரொட்டிமணி (வயது 54), சேலம் மாவட்டம் புளியம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 28), பவானி ஆனந்தம்பாளையத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் (வயது 40), குருவரெட்டியூர் அரசமரவீதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 44), வெள்ளித்திருப்பூர் தொப்பபாளையம் நால்ரோட்டைச் சேர்ந்த வரதராஜன் (வயது 45), சித்தோடு நடுப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 56), மேட்டூர் நவப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 35) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், இதில் முனுசாமி (எ) ரொட்டி மணி என்பவர் இந்த சூதாட்ட ஏற்பாட்டை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்க பணம், 10 சீட்டு கட்டுகள் மற்றும் 11 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu