அந்தியூர் குருநாதசுவாமி கோயில் குதிரைச் சந்தையில் சூதாட்டம்: 10 பேர் கைது
Erode News- சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது (மாதிரிப் படம்).
Erode News, Erode News Today- அந்தியூர் குருநாதசுவாமி கோயில் குதிரைச் சந்தையில் சூதாட்டம் விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான கால்நடைச் சந்தை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோயில் பகுதிகளில் அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குதிரைச் சந்தையில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இடத்துக்குச் சம்பவ சென்ற போலீசார் அங்கு தகர கொட்டகையில் பணத்தை பந்தயமாக வைத்து சீட்டு சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பவானி தளவாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் (வயது 49), அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 34), சேலம் மாவட்டம் சங்ககிரி வீரப்பம்பாளையம் சுப்பிரமணி மகன் பால்சாமி (வயது 37), அந்தியூர் ஆர்.கே.புதூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மோகன் (வயது 44), பவானியைச் சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (வயது 28), மது மகன் சேகன் (வயது 32), ஜம்பை நல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தர்மன் (வயது 41), சின்னத்தம்பிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 42), பவானியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சரவணன் (வயது 51), பவானி மேற்கு தெரு முருகன் மகன் குருசாமி (வயது 41) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 9 செல்போன்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu