அந்தியூர் அருகே நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறப்பு

அந்தியூர் அருகே நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறப்பு
X
தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகள்
அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் தெரு நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது வீட்டிற்கு முன்புறம் கட்டியிருந்த ஆடுகளை வெறித்தனமாக கடித்து குதறியுள்ளது.

இதில், ஏழு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கு சொந்தமான மூன்று ஆடுகளையும், துரை மற்றும் பாலு ஆகியோருக்கு சொந்தமான நான்கு ஆடுகளையும், செல்வராஜ் என்பவரது கன்று குட்டியையும் தெரு நாய்கள் கடித்து இறந்தன.இதனால், விவசாயிகளும், ஆடு மாடுகள் வளர்ப்போரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது மட்டுமின்றி ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business