நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 10 வழக்குகள் பதிவு

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 10 வழக்குகள் பதிவு
X

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு.

ஈரோடு மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுவாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது, விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு தடுத்தல், பட்டாசு வெடிக்க, காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி என, நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர்த்து பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் டவுன், தாலுகா, சூரம்பட்டி, பவானி, அந்தியூர், கோபி, கடத்தூர். புஞ்சைபுளியம்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் நேரக்கட்டுப்பாட்டை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil