சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடனுதவி பெற ஈரோடு மாநகராட்சி அழைப்பு

சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடனுதவி பெற ஈரோடு மாநகராட்சி அழைப்பு
X

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் (கோப்புப் படம்).

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் தகுதியுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு), பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, வங்கி. கணக்கு புத்தகம்(ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்). வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுடன் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமுதாய அமைப்பாளர்களை அலுவலக வேலை நாட்களில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு மாநகராட்சி முதல் மண்டல அமைப்பாளர் சாந்தி 90958 97424, இரண்டாம் மண்டல அமைப்பாளர் ஜெயந்தி 91502 51711, 3ம் மண்டல அமைப்பாளர் மகாராஜன் 99428 33053, 4ம் மண்டல அமைப்பாளர் மகேஸ்வரி 99443 02941 ஆகியோரை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்