விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
X

பைல் படம்.

தர்மபுரி அருகே விவசாயிகள் போராட்டத்தால் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கணேசனின் குடும்பத்திற்கு முதல்வர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business