அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது
X

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையம்.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தமாணிகோம்பை பகுதியை சேர்ந்த 17வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மூவரும் சேர்ந்து கடந்த 1ம் தேதி சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் 4ஆயிரம் பணமும்,10 சிகரெட் பாக்கெட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 கம்ப்யூட்டர்களையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூன்று சிறுவர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!