தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு
X

காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 23 லட்சத்தில் கட்டப்பட்ட கூடைபந்து மைதானத்தை கேபி அன்பழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

அரசானை வெளியிட்டும் திமுக அரசு வேளாண்மை, தோட்டக்கலை பட்டய படிப்புகளுக்கு இந்தாண்டு சேர்க்கை நடத்தவில்லை என கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தர்மபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ரூ.5 லட்சம் மதிப்பில் கூடைப்பந்து மைதானம் அமைக்கபட்டது. ஆனால் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மாணவர்கள் மற்றும் கழக தகவல் தொழில்நுட்பபிரிவு வேண்டுகோளை ஏற்று தன்னிறைவு திட்டத்தின் மூலம் ரூ.23 லட்சம் மதிப்பில் இந்த கூடைப்பந்து மைதானம் அமைக்கபட்டு திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்.கல்வி துறையில் அதிமுக அரசு எண்ணற்ற சாதனைகள் செய்து உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டம், 14 வகையான பொருட்கள் கொடுத்தார். பள்ளி பருவத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், உடன் தேர்வு உருவாக்கி தந்தது அதிமுக அரசு. மருத்துவர் கனவை 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 435 மாணவர்கள் கடந்த ஆண்டு டாக்டர்களாகி உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 27 பேர் மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார். அரூர், தர்மபுரி, பாலக்கோடு என மூன்று கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியது அதிமுகஅரசு. உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மாற்றியதும் அதிமுகஅரசு.

பாலகோட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கப்பட்டது. நான்கு மாத காலத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்து போது இம்மாவட்டத்தில் வேளாண்மை பட்டய படிப்பு, தோட்டகலையில் பட்டய படிப்பு ஆகியவை கொண்டு வந்து அரசாணை வெளியிடபட்டு அதற்காக 92 ஏக்கர் இடம் தேர்வு செய்யபட்டும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இந்த திமுக அரசு நடத்தவில்லை. பந்தாரஹள்ளி,பொம்மஹள்ளி,கன்னிப்பட்டி என அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil