'கிராமங்கள்தோறும் மருத்துவமனை' பா.ம.க வேட்பாளர் உறுதி

கிராமங்கள்தோறும் மருத்துவமனை  பா.ம.க வேட்பாளர் உறுதி
X
நான் வெற்றி பெற்றால் 'கிராமங்கள்தோறும் மருத்துவமனை' அமைத்துக் கொடுப்பேன் என்று பா.ம.க வேட்பாளர் உறுதியளித்தார்.

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போன்று நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பூதனஅள்ளி ஊராட்சி, கோபாலம்பட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், கிராமங்கள் தோறும் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றார். அவருடன் அதிமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் கூட்டணி கட்சித்தொண்டர்கள் பலர் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!