தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை

தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை
X

மாயமான அம்பிகா.

தொப்பூர் அருகே மாயமான லாரி டிரைவரின் மனைவியை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வெள்ளப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் 45. லாரி டிரைவர். இவரது மனைவி அம்பிகா 40. இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்பிகா தனது தாய்வீடான தொப்பூர் செக்போஸ்டில் உள்ள சரஸ்வதி வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்து கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் நவீன்குமார் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அம்பிகாவை தேடி வருகின்றனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!