திட்டக்குடி அருகே மாமியாருடன் கள்ளத்தொடர்பால் உயிரிழந்த மருமகன்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வேல்முருகன். இவருக்கும் வேப்பூரில் உள்ள இவரது பெரியம்மா மகள் குமுதாவின் மகளான பவித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. உறவுமுறையில் அக்காளின் மகளைத் தான் வேல்முருகன் திருமணம் செய்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த வேல்முருகன் கடந்த வருடம் தனது சொந்த ஊரான கழுதூர் வந்து பவித்ராவை கோயிலிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து 9 மாதங்கள் மட்டும் ஆன நிலையில், பவித்ரா தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அடிக்கடி பவித்ராவை வந்து பார்த்து சென்று கொண்டிருந்த வேல்முருகன் கடந்த 28-10-21 அன்று தனது மனைவியைப் பார்க்க சென்றுள்ளார்.
இரவு 11 மணியளவில் வேல்முருகனின் தாயாருக்கு, தொலைபேசி வாயிலாக வேல்முருகன் இறந்து விட்டாதாகவும், அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் வேல்முருகனின் தாயார் வேல்முருகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அதனை மறைப்பதற்காகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறி தன் மகனின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வேல்முருகன் தாய் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், தற்பொழுது வேப்பூர் போலீசார் வேல்முருகனின் மாமியார் குமுதா,மனைவி பவித்ரா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மாமியாருடன் மருமகனுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையொட்டி குமுதாவை வேப்பூர் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu