/* */

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்: பொதுமக்கள் அதிருப்தி

திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்: பொதுமக்கள் அதிருப்தி
X

கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பில்லூர் அணைக்கு கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொழியும் மழைநீர் காட்டாறுகள் மூலம் வந்தடைகிறது.

பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் நீர் மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டத்திற்கு 1, 2-வது கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக செல்லும் இந்த குடிநீர் குழாய்கள் நால்ரோடு, தேரம்பாளைம், நடூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிவு நீர் சாலையோரங்களில் வழிந்தோடும்.

இதேபோல மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் கிராமத்தில் ஒரு இடத்தில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் அருகிலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்தது.

விடிய, விடிய தண்ணீர் பாய்ந்ததால் தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணறு நிரம்பி வழிந்தது. கிணறு நிரம்பியதால் அருகிலுள்ள கருவேப்பிலை தோட்டத்திலும் தண்ணீர் சூழ்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவு நேரத்தில் இவ்வளவு குடிநீர் வீணானது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து பெள்ளாதி ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தேரம்பாளையம் பகுதியில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Updated On: 5 Jun 2023 1:01 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு