கோவை அருகே காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை அருகே காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்
X
கோவை அருகே பைக்கில் சென்றவரை காட்டெருமை தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றாவில் வசித்து வரும் ரஷாக்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது இளைய மகன் ஆகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சென்றுள்ளார்.

அப்போது சிறுகுன்றா கேண்டீன் பகுதியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமை ஒன்று அவரை தாக்கியது. இதில் மார்பு, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அவரது மகன் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது-. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!