வால்பாறை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க விடியல் பயணத் திட்டம் துவக்கம்

வால்பாறை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க விடியல் பயணத் திட்டம் துவக்கம்
X

வால்பாறையில் விடியல் பயணத் திட்டம் துவக்கம்

மலை பகுதிகளில் உள்ள பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

திமுக அரசு பதவியேற்றதும் சாதாரண அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விடியல் பயணம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதேசமயம் வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் வால்பாறை போன்ற மலை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் வால்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் உள்ள பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், மலைப்பகுதிகளுக்கு புதிய பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து வால்பாறை மலைப்பகுதிகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலைஞர் விடுயல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 200 பயனாளிகளுக்கு தையல் மெஷின்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “மலைப் பகுதியில் ஓடும் பேருந்துகளுக்கு பதிலாக விரைவில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் விட்டு போன ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 1500 கோடி ஒதுக்கியதை அடுத்து, தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும், மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்