ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
X

Coimbatore News- கவியருவியில் குளித்து மகிழும் மக்கள்! 

Coimbatore News- கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். இப்போது மீண்டும் கவியருவி திறக்கப்பட்டுள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவியல் குளித்துச் செல்வது வாடிக்கை. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை துவங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் அருவியல் குளிக்க வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பொழிவு குறைந்து இருப்பதால், தற்போது அருவிக்கு வரும் நீரின் அளவு சீரானது. இதனைத் தொடர்ந்து வனத்துறையால் போடப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வந்து செல்கின்றனர். இது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்