வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
X

யானை தாக்கியதில் உயிரிழந்த மாணிக்கம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே, யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்தவர் மாணிக்கம்(63). இவர் , இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில், நேற்றிரவு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியை முடிந்துக் கொண்டு வழக்கம் போல் இன்று காலை வீட்டிற்கு மாணிக்கம் வரவில்லை. இதனால், அவரது மனைவி பூங்கா கவலையடைந்து, தேடிச் சென்றுள்ளார். அப்போது, மாணிக்கம் ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிழந்தவரின் உடலை கைப்பற்றிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், ஒற்றை காட்டுயானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம், வால்பாறை மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!