முறைகேடு புகார்: வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது மேலும் ஒரு வழக்கு

முறைகேடு புகார்: வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது மேலும் ஒரு வழக்கு
X

வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜ்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது, நிதி மோசடி செய்ததாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ், தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி நிதியை முறைகேடு செய்தாக, கடந்த ஏப்ரல் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது மோசடி உட்பட 7 பிரிவுகளில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார், பவுன்ராஜ் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஒப்பந்ததாரர் மணிகண்டன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பொதுமக்கள் பணம் ரூ. 35,78,505 மோசடி செய்து, நகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக மாவட்ட குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கூட்டுச்சதி, மோசடி, பொதுஊழியர் நம்பிக்கை மோசடி செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கோவை குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்