ஒரே நாளில் 296 வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை
பைல் படம்
கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவினர் காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறுகையில்,
அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சான்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதிச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கி, விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.
அதிக பாரம் ஏற்றி சென்றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாகனத்தை இயக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலைக்கும் பாதுகாப்பாக இருக்கும். விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோன்று தொடர்ச்சியாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டிகள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu