உக்கடம் மேம்பால பணி: கோவையில் போக்குவரத்தில் மாற்றம்
பைல் படம்
உக்கடம்-ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டிவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.
உக்கடம் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப ஆத்துப்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் பேரூர் புறவழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடது புறம் திரும்பி பொள்ளாச்சி செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலம் பாலக்காடு ரோடு மின்மயானம் அருகில் யு-டேர்ன் எடுத்து கரும்புக்கடை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக குறிச்சி பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் வந்து உக்கடம் செல்லலாம் அல்லது ஆத்துப்பாலத்தில் இருந்து இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு காளவாய், புட்டுவிக்கி சாலை, சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
உக்கடத்திலிருந்து பாலக்காடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், உக்கடத்திலிருந்து குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை மார்க்கமாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த வாகனங்கள் பேரூர் புற வழிச்சாலையை அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் குனியமுத்தூரை அடுத்து சுண்ணாம்பு காளவாய் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புட்டு விக்கி சாலை சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மேம்பால பணிகள் முடிவடையும் வரை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu