சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
X

போக்குவரத்து மாற்றம் - பைல் படம்

சாலை பணி காரணமாக சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது

சிங்காநல்லூர்- வெள்ளலூர் ரோடு நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், சிங்காநல்லூரில் இருந்து திருச்சி ரோட்டில், சாந்தி கியர்ஸ் சந்திப்பு, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக, நெசவாளர் காலனி, பட்டணம், நொய்யல் பாலம், எல் அண்ட் டி பைபாஸ் சென்று, வெள்ளலூர் செல்லலாம்.

ஒண்டிப்புதூர் மேம்பாலம், மிராஜ் தியேட்டர் அருகில் 'யூ' டர்ன் செய்து பாலத்தின் அணுகுசாலை, பட்டணம் நொய்யல் பாலத்தின் வழியாக, எல் அண்ட் டி புறவழிச்சாலை, பாலக்காடு ரோட்டில் வலப்புறம் திரும்பி வெள்ளலூர் செல்லலாம்.

சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிபுரம் சோதனை சாவடி, தனியார் பள்ளி அருகே 'யூ' டர்ன் செய்து கோவை ரோட்டை அடைந்து, எல் அண்ட் டி புறவழிச்சாலை, பாலக்காடு ரோடு, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாகவும் வெள்ளலூர் செல்லலாம்.

கனரக வாகனங்கள் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதூர் சந்திப்பு, ஒண்டிப்புதூர் மேம்பாலம், காமாட்சிப்புரம் சோதனை சாவடி, இருகூர் பிரிவு, திருச்சி ரோடு, எல் அண்ட் டி புறவழிச்சாலை, சிந்தாமணிபுதூர் ரோட்டிலிருந்து வலப்புறம் திரும்பி சுங்கச்சாவடி வந்து, கஞ்சிக்கோணம்பாளையம் வழியாக வெள்ளலூர் செல்லலாம்.

வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் இலகுரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி பட்டணம் ரோடு வழியாக எல் அண்ட் டி புறவழிச் சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில் இடப்பக்கமாக ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.

வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் கனரக வாகனங்கள், வெள்ளலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி எல் அண்ட் டி புறவழிச்சாலையை அடைந்து நெசவாளர் காலனி நொய்யல் பாலத்தில், இடப்பக்கமாக, ஒண்டிப்புதூர் சந்திப்பு வழியாக செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை அமலுக்கு வந்த நிலையில் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!