குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
X

கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

நீர் வரத்து இல்லாததால் குரங்கு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சமவெளியில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், கோடைக்காலத்தை கொண்டாடவும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மழை பெய்து வருவதால் வால்பாறை பகுதி முழுவதும் இதமான காலசூழ்நிலை நிலவி வருகிறது. சமவெளிப் பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாலும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய சுற்றுலா தலங்களில் முக்கியமானவைகள் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் உள்ள குரங்கு அருவி, வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி ஆகியவைகள்.

இதில் ஆழியாறு பகுதியில் நிலவும் வறட்சி காரணமாவும், அட்டகட்டி மலைப் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் மழை இல்லாததாலும் குரங்கு அருவியில் தண்ணீர் இல்லை. இதனால் வனத்துறையினர் குரங்கு அருவிக்கு செல்ல தடைவிதித்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவது மேலும் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil