காவல் நிலையம் முன்பு ரவுடி போல ரீல்ஸ் போட்ட இளைஞர் கைது

காவல் நிலையம் முன்பு ரவுடி போல ரீல்ஸ் போட்ட இளைஞர் கைது
X

சந்தோஷ் குமார்

சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்துள்ளனர்.

கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 22 வயதான இவர், கோவை செல்வபுரம் காவல் நிலையம் மற்றும் அந்த பகுதியின் பல்வேறு இடங்கள் முன்பு கெத்தாக நின்று ரவுடி போல ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்துள்ளனர்.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சந்தோஷ் குமார் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், மின்னனு முறையில் தவறான தகவல்களை பரப்புதல், இரு குழுக்கள் இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சந்தோஷ் குமாரை கைது செய்த செல்வபுரம் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai marketing future