விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் : எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக போராட்டம்
கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகளாக மக்களுக்கு எதையும் செய்யாமல் நடத்தி முடித்து உள்ளார்கள். எடப்பாடி அற்புதமான ஆட்சி நடத்தினார். கோவையின் வளர்ச்சிக்கு எடப்பாடி தான் காரணம். கேட்ட திட்டங்களை அனைத்தும் அள்ளி கொடுத்தவர் எடப்பாடி.
ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கபடும் அளவிற்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிக் ஹவர் கட்டணத்தினால் தொழில்கள் முடக்கம், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு சென்று விட்டது. கடந்த அதிமுக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் ஜோரக வசூல் நடக்கிறது. எந்த திட்டமும் நடக்கவில்லை. சாலைகள் சீரமைப்பு இல்லை. கோவைக்கு இத்தனை பாலங்கள் வர காரணம் எடப்பாடி தான். அனைத்து பாலங்களும் எடப்பாடி பெயரை தான் சொல்லும். எளிமையான முதல்வராக இருந்து பிரமாண்டமான திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி. கோவை அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் மேம்படுத்த பட்டது. விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் 1 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திடும். ஆனால் இன்னும் திமுக செய்யவில்லை.
ராகுல் காந்தியா? மோடியா? என்று பார்த்து தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்தியதால், திமுக வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். இனி 1 வருஷம் தான் இந்த ஆட்சி, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தான் முதல்வர். எதையும் செய்யாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். காவல் துறை கை கட்டப்பட்டுள்ளது. எங்கும் போதை பொருள் விற்கபடுகிறது. வருங்காலம் அழிந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வேலுமணி, அனைத்து தரப்பில் மக்களும் 100% உயர்வு என்பது பொருத்து கொள்ள முடியாதது. வருடா வருடம் உயர்வு என்பது மக்களை பாதிக்கும். மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும். போதைப்பொருளை தடுக்க வேண்டும். சென்னை விமான சாகசத்தின் போது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு, கூடுதலான நிவாரண நிதி வழங்க வேண்டும். கூடுதல் கவனமுடன் இருந்திருக்க வேண்டும் என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu