கோவை அருகே டைல்ஸ் கடையில் தீ விபத்து ; சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

கோவை அருகே டைல்ஸ் கடையில் தீ விபத்து ; சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
X

கோவை அருகே டைல்ஸ் கடையில்  ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்.

Tiles Shop Fire Accident கோவை அருகே டைல்ஸ் கடையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு, தீ பரவியுள்ளது. இதனையடுத்து அவர் மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

Tiles Shop Fire Accident

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியூஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், பூ மார்க்கெட் அருகே உள்ள தேவாங்க பேட்டை வீதி இரண்டில் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ் மற்றும் சேனிட்டரிவேர்ஸ், சிபி பிட்டிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடந்த 8 வருடமாக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் பியூஸ் ஆர் தாத்தே வழக்கம் போல கடையை திறந்துள்ளார். அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு, தீ பரவியுள்ளது. இதனையடுத்து அவர் மின்சாரத்தை துண்டித்துள்ளார். இருப்பினும் தீ மளமளவென பரவியதில், பொருட்கள் தீயில் எரிந்து சம்பலாகின.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர். சிறிது நேரத்திற்குள் கீழ் தளம் மற்றும் முதல் மாடியில் இருந்து புகை வெளியேறியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. கீழ் தளத்தில் பரவிய தீயால் சுமார் 50 லட்சம் ரூபாய், மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் 50 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!