காதலை முறித்த மாணவி ; மிரட்டல் விடுத்த மாணவர் கைது

காதலை முறித்த மாணவி ; மிரட்டல் விடுத்த மாணவர் கைது
X

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் 

இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வேன் என மிரட்டி உள்ளார்.

கோவை சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரியன் என்ற கல்லூரி மாணவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து, தனது மகளை கண்டித்துள்ளார்.

பின்னர் இருவரின் காதல் முறிவடைந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரியன் அலைபேசி மூலம் அப்பெண்ணை அழைத்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வேன் என மிரட்டி உள்ளார்.

இதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள உணவகம் சென்று பிரியன் பேச முயன்ற போது, தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும், படிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அப்பெண் கூறியதால் பிரியன் ஆத்திரமடைந்து மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் பிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture