/* */

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

HIGHLIGHTS

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
X

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தனது தொகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இன்று நான்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினார்.

அத்துடன், கொரானா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கையுறைகள், ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கருவி உட்பட கொரானா நோய் தடுப்பு உபகரணங்களையும், வேலுமணி வழங்கினார். நோய்த்தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், மருத்துவமனை வரும் பொதுமக்களுக்கும் மதிய உணவுகளை எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதை தொடர்ந்து, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்த காலை முதல் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு மதிய உணவுகளை வரவழைத்து, அனைவருக்கும் உணவுகளை வழங்கினார்.

சமீபத்தில் 25 ஆக்சிஜன் செருவூட்டி இயந்திரங்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Jun 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?