தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை

தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை
X

Coimbatore News- வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Coimbatore News- வெடி குண்டு மிரட்டலை அடுத்து, கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர்.

Coimbatore News, Coimbatore News Today- கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் குண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேகத்துக்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி என தெரியவந்தது. அதே நாளில் சென்னையில் உள்ள இரண்டு வெவ்வேறு பள்ளிகளுக்கும், கோவையில் உள்ள பள்ளி ஒன்றிற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கும் போலீஸார் நடத்திய சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால் அது புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி வளாகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு இ-மெயில் மூலம் அந்த பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இன்று பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸாரும், பள்ளி நிர்வாகமும் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் மாணவர்களை விட வரும் பெற்றோர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடவள்ளி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!