அதிமுக பிரமுகர் மீது ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் ; போலீசார் விசாரணை
Coimbatore News- தாக்குதலுக்கு உள்ளான ராஜா
Coimbatore News, Coimbatore News Today- கரூர் பகுதியை சேர்ந்த இளைஞர் கோபிநாத் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை பாதியில் விட்டவர். இவர்மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.கோபிநாத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் படிக்கும் போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது, 92 வது வார்டு அ.தி.மு.க.பிரமுகரான ஜூனியர் ராஜா அவரை நிறுத்தி மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது ராஜாவுடன் கோபிநாத் தகராறு செய்துள்ளார். அப்போது கட்டாயாம் ராஜாவை பழிவாங்க போவதாக எச்சரித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் குனியமுத்தூர் பகுதியில் ராஜா நடந்து சென்ற போது, கோபிநாத், தன்னுடைய நண்பர் பூமிஸ்வரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
ராஜாவை பார்த்ததும் அவரை விரட்டிச்சென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ராஜாவின் 2 கைகளிலும் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதைபார்த்த அருகில் இருந்த பொது மக்கள் அவர்களை விரட்டியபோது தப்பி ஓடினர். காயம் அடநை்த அ.தி.மு.க. பிரமுகர் ராஜா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதே பகுதியில் தலைமறைவாக இருந்த கோபிநாத், அவருடைய நண்பர் பூமிஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குனியமுத்தூர் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் ராஜாவை முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu