/* */

கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம்; திதி கொடுத்து விஹெச்பி அஞ்சலி

Coimbatore Serial Bombing Day Tribute கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர்.

HIGHLIGHTS

கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம்; திதி கொடுத்து விஹெச்பி அஞ்சலி
X

 கோவை தொடர் குண்டு வெடிப்பு நினைவுதினத்தையொட்டி விஹெச்பி சார்பில்  திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர். 

Coimbatore Serial Bombing Day Tribute

கடந்த 1998, பிப்ரவரி 14 ம் தேதி கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் கோட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நொய்யல் படித்துறையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வ இந்து பரிஷத் கோட்ட செயலாளர் சிவலிங்கம் கூறும்போது, தொடர் குண்டு வெடிப்பில் பலியான ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் இது போன்ற பயங்கரவாத செயல் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என வருகின்ற தலைமுறைக்கு இதனைத் தெரியப்படுத்த வேண்டும். இன்று மாலை 3:52 மணிக்கு ஆர்.எஸ். புரம் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எந்த இடத்திலே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடத்திலே நினைவுத்துாணையும் அமைக்க வேண்டும். வரலாற்றை மறந்தால் அந்த நாடு முன்னேற முடியாது. இந்த பயங்கரவாத செயல்களில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.

Updated On: 14 Feb 2024 8:15 AM GMT

Related News