திமுக எந்த விதமான வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை : பாஜக வேட்பாளர் வசந்தராஜன் குற்றச்சாட்டு

திமுக எந்த விதமான வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை : பாஜக வேட்பாளர் வசந்தராஜன் குற்றச்சாட்டு
X

Coimbatore News-  வேட்பாளர் வசந்த ராஜன்

Coimbatore News- கடந்த முறை திமுக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, எதையும் நிறைவேற்றவில்லை.

Coimbatore News, Coimbatore News Today- கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் வட இந்தியர்கள் அதிகமாக இருப்பதால் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வசந்த ராஜன், “பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உடுமலை, வால்பாறை, தொண்டாமுத்தூர், ஆர்.எஸ்.ரோடு பகுதியைக் கொண்டது. இங்கு இருக்கக்கூடிய கரும்பு, தென்னை போன்ற பிரச்சனைகளை விவசாயிகளுக்கு தீர்த்து வைக்க உள்ளோம். தேங்காய் எண்ணெய் நியாய விலைக் கடையில் விற்பனை செய்வதற்கு முயற்சி எடுப்போம்.

வால்பாறை பகுதியை நல்ல சுற்றுலா தளமாக மேம்படுத்த போகிறோம். அங்கு வசிக்கக்கூடிய மக்கள் வேலை தேயிலை தோட்டத்தில் செய்கிறார்கள். அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியேற்றிகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த உள்ளோம். ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். அது 2 மாநிலங்கள் இருக்கக்கூடிய பிரச்சனை, அதனை தீர்த்து வைப்போம். கடந்த முறை திமுக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, எதையும் நிறைவேற்றதால் இந்த முறை திமுகவில் அவருக்கு சீட்டு கொடுக்கவில்லை. திமுகவை சேர்ந்தவர்களே இந்த முறை திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். திமுக கட்சி மீது அதிருப்தியாக இருக்கின்றனர்.

கருணாநிதி இருந்தவரை திமுக தொண்டர்களுக்கு நல்ல கட்டுரைகளை எழுதினார். ஆனால் ஸ்டாலின் இருக்கும் போது திமுக கட்சி கரைந்து கொண்டே இருக்கிறது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. பிரசாந்த் கிஷோர் போன்ற ஆட்களை வைத்து கட்சியில் வேலை செய்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி போன்ற கரூர் கம்பெனி ஆட்களின் நம்பி திமுக கட்சி நடத்தி வருகிறேன். அவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கடந்த தேர்தலில் 2000 ரூபாய் பணமும் கொலுசும் கொடுத்தனர்” எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!