முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை

முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை
X

குட்டி யானை

குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததால் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை 3 மாதமான குட்டி யானையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை தாயை பிரிந்து சென்றது. குட்டி யானை அதன் கூட்டத்துடன் வனத்திற்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த யானையை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது.

இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க மேற்கொண்ட பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.

பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் இறுதி வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, இன்று அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story
ai marketing future