பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகர் போக்சோ வழக்கில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகர் போக்சோ வழக்கில் கைது
X

வடவள்ளி காவல் நிலையம் (கோப்பு படம்).

கோவை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800 - க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் என்பவர் பணி புரிந்த வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளியில் 9 - ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அந்த ஆசிரியர் பால்ராஜின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே ஒரு மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் பள்ளி வளாகத்தில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதனிடையே மாநகர காவல் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் பால்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!