கோவை கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

கோவை கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
X

விஷால்

கணியூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் என்ற மாணவர், கோவையில உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்8. இவருடன் திருப்பூரில் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள் நரேன், பிரணவ், பூபேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கோவையில் சந்தித்துள்ளனர். நண்பர்கள் 5 பேரும் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, காரில் மீண்டும் திருப்பூர் திரும்பி உள்ளனர்.வோல்ஸ் வேகன் காரில் கோவை - அவிநாசி சாலை வழியாக திருப்பூர் நோக்கி சென்றனர். அப்போது கணியூர் சுங்கச்சாவடியை தாண்டிய உடன் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விஷால் மற்றும் பூபேஷ் என்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த நரேன், பிரணவ் மற்றும் ஒரு மாணவர் என மூன்று பேர் காயம் அடைந்தனர். நரேன், பிரணவ் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா