பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை

பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
X

அண்ணாமலை

தங்க சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும் தன்மானம் இருக்கும் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை புரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பாப்பம்பட்டி கிராம மக்கள் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ தேர்தல் இருந்தாலும் கூட இந்தத் தேர்தல் பிரதமராக யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல். பிரதமர் நாற்காலிக்கு தகுதியான ஒரே நபர் நரேந்திர மோடி தான். அவருக்கு நிகர் அவர் மட்டும்தான். காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி எட்டு மாதமாக இருக்கிறது. இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லவில்லை. 2004 ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து மன்மோகன் சிங் என்பவரை பிரதமராக சொன்னார்கள். அதே போல இன்றும் இண்டி கூட்டணியில் இருக்கின்றனர். பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்

பிரதம மந்திரி என்பவர் முக்கியமானவர். மோடி ஆட்சியில் பத்தாண்டு காலத்தில் அனைவரையும் மையப்படுத்தி முன்னிலைப்படுத்தி பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது.அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று கோடி வீடுகள் கட்டப்படும் என பிரதமர் சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காமல், பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மோடி பலமாகும் போது கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியும் பலமாகும். உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை அனுப்பி வைப்பீர்கள் என நினைக்கிறேன். பாப்பம்பட்டி பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

920 கோடி ரூபாய் மத்திய அரசு இடங்களில் இருந்து வாங்கிக் கொண்டு கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் குரும்பர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு காப்பீட்டு அட்டை இருப்பதைப் போல, ஆடு மேய்ப்பவர்களுக்கு காப்பீட்டு அட்டை வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். ஆடு மேய்ப்பவர்களின் கோரிக்கையை ஆடு மேய்ப்பவரை தவிர யார் செய்ய முடியும்? அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். கால்நடைகளுக்காக மருத்துவமனை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் இரண்டையும் கையில் இருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கரண்ட் ஆஃப் பண்ணிவிட்டு வீட்டுக்குச் சென்று திமுகவினர் பணத்தை கொடுப்பார்கள். இதை 70 ஆண்டு காலமாக பார்த்து பார்த்து கொண்டு இருக்கின்றோம்.

மக்கள் எந்த நிலைமையில் இருக்கிறோமோ அதே நிலைமையில் தான் இப்பொதும் இருக்கிறோம். பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இதை இந்த முறை மாற்றி காட்டுவோம். தங்க சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும் தன்மானம் இருக்கும் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil