நெடுஞ்சாலைத் துறை பெண் அதிகாரி வீட்டில் பணம், நகை கொள்ளை

நெடுஞ்சாலைத் துறை பெண் அதிகாரி வீட்டில் பணம், நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு

கோவை சூலூர் அருகே, நெடுஞ்சாலைத் துறை பெண் அதிகாரி வீட்டில் ரூ. 6 லட்சம், 5 1/2. பவுன் நகைகள் கொள்ளை போனது.

கோவை மாவட்டம் சூலூர் ஜி.கே.எஸ்.நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளராக சூலூரில் உள்ள அலுவலகத்தில் பணியில் உள்ளார்.

சீனிவாசனின் தாயார் கடந்த 3 வாரங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் பவானியில் காலமாகி உள்ளார். இதனால் குடும்பத்துடன் அனைவரும் ஈரோட்டில் தங்கி இருந்துள்ளனர்.நேற்றிரவு அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன், சூலூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 1/2. தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future