சூலூர் அருகே கோயிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
Coimbatore News- ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டு பழமையான கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அந்த வகையில் கருமத்தம்பட்டி அவிநாசி சாலையில் உள்ள 16.30 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்காக குத்தகைக்கு எடுத்த சிலர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த நிலத்தை இன்று வருவாய் துறை உதவியுடன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
தொடர்ந்து நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அளவீடு செய்த அதிகாரிகள், இந்த நிலம் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமானது என்றும் அந்நியர்கள் அத்துமீறி இந்த நிலப்பரப்பில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாசகங்கள் அடங்கிய பொது அறிவிப்பு பலகைகளையும் நட்டு வைத்தனர்.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 300 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர்ந்த கோரிக்கையை ஏற்று, இந்து அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை, கோவிலின் நிதி நிலைமையை மேம்படுத்தி, கோவில் வளர்ச்சி பணிகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது போன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்கும் விஷயத்தில் ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu