கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்

கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்

கணியூர் சுங்கச்சாவடியை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர்  போராட்டம் நடத்தினர்.

சுங்கச்சாவடி என்ற கட்டணம் என்ற பெயரில் சாமானிய மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக மனித நேய மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து தமிழகத்தில் உள்ள 7 முக்கிய சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி அருகே மேடை அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது சுங்கச்சாவடி என்ற கட்டணம் என்ற பெயரில் சாமானிய மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

சுங்கச்சாவடிகளில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த அவர்கள், காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் , ஆண்டுதோறும் இரு முறை கட்டண உயர்வு கைவிட வேண்டும், புதிய சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் திறக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் , பின்னர் ஊர்வலமாக சென்று சுங்கசாவடியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியின் இருபுறங்களும் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story