குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : திமுக வேட்பாளர் வாக்குறுதி..!

குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : திமுக வேட்பாளர்  வாக்குறுதி..!
X

கணபதி ராஜ்குமார் வாக்குசேகரிப்பு

பாப்பம்பட்டியில் பிரசாரத்தை துவக்கிய கணபதி ராஜ்குமார் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக, இன்று பாப்பம்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். கள்ளப்பாளையம், சின்னகுயிலி, பெரியகுயிலி, பொன்னாகனி, பச்சார்பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து சின்னகுயிலியில் வாக்களர்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பெண்களுக்கு, தமிழக அரசு சிறந்த பல திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. உரிமை தொகை, பஸ் பயணம் இன்னும் தேர்தலுக்கு பிறகு இன்னும் பல திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு வர இருக்கின்றது.

ஆனால் 10 ஆண்டுகளாக பாஜக நம்மை ஆண்டு கொண்டிருந்தது. நமக்கு கொடுத்ததெல்லாம் விலைவாசி உயர்வு நிதி நெருக்கடிதான். கேஸ் விலை இன்னைக்கும் அதிகமாகத்தான் உள்ளது, பெட்ரோல் டீசல் விலை எகிறிட்டே போகிறது. பொருளாதார நெருக்கடி நமக்கு எதுவும் செய்யல நம்ம பிரச்சனைகளை பத்தி பேசணும் பாராளுமன்றத்தில் பேசவும் குறைக்க வேண்டுமெனில் நீங்க திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நம்ம பிரச்சனைகள் நம்ம தொகுதியோட பிரச்சினைகள் எல்லாமே போய் அவர்கள் காதில் ஒலிக்கும்.

ஏனென்றால் அவர்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமே செய்வார் நம்ம தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதிதிராவிடர் காலனிக்கு இலவச பட்டா வழங்கவும், அவர்களுக்கு சமுதாய கூடம் கட்டிக்கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும், குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும், நிலத்தடி நீர்ரமட்டம் உயர குளம் குட்டைகளுக்கு பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்