சூலூர் அருகே லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து: 15 பேர் காயம்

சூலூர் அருகே லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து: 15 பேர் காயம்
X

விபத்துள்ளான பேருந்து

விபத்து காரணமாக பல்லடம் - கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் கற்பகம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்காக மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் பேருந்து ஒன்று சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

ரத்தினவேலு என்பவர் கல்லூரி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

காயமடைந்த மாணவர்கள் அருகே இருக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் - கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !