கணியூரில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

கணியூரில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
X

Coimbatore News- கருணாநிதி சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்

Coimbatore News- திமுக சார்பில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்

Coimbatore News, Coimbatore News Today- தமிழ் புதல்வன் திட்டம், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிவுகளை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். பந்தய சாலை பகுதியில் உள்ள கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சூலூர் அடுத்த கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சாலை மார்க்கமாக வருகை தந்த முதலமைச்சர், அங்கு தனியார் நிலம் ஒன்றில் திமுக சார்பில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த நூலகத்தையும்,106 அடி உயர பிரம்மாண்டக் கொடி கம்பத்தையும் திறந்து வைத்தார். அறிவு சார் நூலக கட்டிட வளாகத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, அன்பழகன் மற்றும் கருணாநிதி ஆகியோரது படங்கள், திமுக அரசின் காலை உணவு திட்டம், மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் இலவசம் உள்ளிட்ட சாதனை விளக்க புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முதல்வருக்கு ஏராளமான திமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!