கோவையில் 60 சதவீத வாக்குகளை பாஜக பெறும் : அண்ணாமலை நம்பிக்கை
அண்ணாமலை
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “மக்கள் தன்னெழுச்சியாக வர துவக்கி விட்டனர். களத்தின் நிலவரத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் களத்திற்கு வந்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கோயம்புத்தூரில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வாக்குகள் பெறும்.
தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 60 சதவீத வாக்குகள் பெறும். நான் சொன்னது என்னுடைய கருத்து. தமிழகத்தில் ஊழலை பற்றி பேசக்கூடிய முதல் அரசியல் தலைவர் யார் இருக்கின்றார்?” எனத் தெரிவித்தார். கோவையின் வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ”எஸ்.பி வேலுமணியை கொண்டு வந்து உட்கார வையுங்கள்.
மத்திய அரசில் நடைபெற்று இருக்கக்கூடிய கூடிய ஊழலை 10 கேள்வியாக கொடுக்கின்றேன். எஸ்.பி.வேலுமணியை கொண்டு வந்து உட்கார வையுங்கள். 10 வருடமாக எதுவும் நடக்க வில்லை என்றால், ஸ்மார்ட் சிட்டி பணம் என்னென்ன பணம் கோவைக்கு வந்திருக்கிறது. கான்டிராக்டர் யார்? கோவைக்கு 2021 தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஸ்டாலின் என்ன சொன்னார்? ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னாரே? மணி என்று யாருக்கெல்லாம் பெயர் இருக்கோ அவங்க மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இப்பொழுது இருவரும் அண்ட் கோ போட்டு இருக்கின்றனர். ஊழல் தடுப்புத்துறை இவர்கள் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை எங்கே போனது? திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பின்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் தாமதம்? எஸ்.பி வேலுமணியை பிரஸ்மீட்டில் உட்கார வையுங்கள்.
பத்து கேள்வி எழுதிக் கொடுக்கிறேன். அந்த கேள்விக்கு பதிலை வாங்கி வாருங்கள். காண்ட்ராக்டர் பெயர், எந்த காண்ட்ராக்டர் வேலை எடுத்த காண்ட்ராக்டர் மனைவி கவுன்சிலர் பதவிக்கு நின்றார் என்ற பட்டியல்களை கொடுக்கின்றேன். மத்திய அரசினுடைய திட்டங்களை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கடந்த 10 ஆண்டு காலத்தை பயன்படுத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu