/* */

இமயமலையில் ஏறிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன்

இமயமலை தொடரில் பியாஸ் குண்ட் மலையில் சுமார் 14,000 அடி உயரம் ஏறி கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன் புதிய சாதனை

HIGHLIGHTS

இமயமலையில் ஏறிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன்
X

இமயமலையில் 14,000 அடி ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த சிறுவன் 

கோவை மாவட்டம், வேடப்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா (12).

யத்தீந்திரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை அவரது இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், மனம் தளராமல் அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்தனர். தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா, 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தினார்‌.

மேலும் அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இமயமலை தொடர்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டு சுமார் 14 அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யத்தீந்ரா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 24 April 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!