தமிழ் மொழியை கற்கவும், பேசவும் தயக்கம் வேண்டாம் - நடிகை நமீதா அறிவுரை
Coimbatore News- நடிகை நமீதா
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் பங்கேற்ற நடிகை நமிதா, தனது குழந்தைகளுக்கு குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழியைக் கற்பித்து வருவதாகவும், தாய்மொழியின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மேற்கத்திய நாகரிகத்தை ஏற்றுக்கொள்வதோடு நம் பாரம்பரிய கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். பீட்சா,பர்கர் போன்ற மேற்கத்திய உணவு வகைகளை சாப்பிடும் அதே வேளையில் நம் நாட்டு உணவுகளை சாப்பிட மறக்கக்கூடாது.
என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன். தாய்மொழியில் பேசுவதில் வெட்கப்படத் தேவையில்லை. தமிழ் மொழியை கற்கவும், பேசவும் தயங்காதீர்கள்.ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களை நான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. இந்தியாவின் சூப்பர் ஹீரோ ஹனுமான் தான், அவரைத்தான் சொல்லிக் கொடுத்து வருகிறேன் என்று கூறினார். கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். "கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் அனைவரும் கைத்தறி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நமீதா கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu