200 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

200 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட மகேந்திரா மற்றும் அசோக்.

போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்தக்காரை 2 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்தி சென்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் மற்றும் இரண்டு ‌காவலர்கள், நீலம்பூர் சுங்க சாவடி அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை வழி மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்தக்காரை 2 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்திக் சென்றனர். போலீசார் துரத்தி வருவதை பார்த்து சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கி காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் விடாமல் துரத்திச் சென்று, அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா மற்றும் அசோக் என்றும், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து 200 கிலோ கிராம் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்ற காவலில் சாறையில் அடைத்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings