கோவை மாநகராட்சியில் தடுப்பூசி டோக்கன் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதி மையத்தில், தடுப்பூசி போட திரண்டிருந்த மக்கள்.
கோவை மாவட்டத்தில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 லட்சத்து 74 ஆயிரத்து782 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட சுகாதார துறையிடம் கைவசம் தடுப்பூசிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று புறநகர் பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
அதேவேளையில், சுகாதாரத்துறை தரப்பில் கோவை மாநகராட்சியிடம் கொடுத்து இருந்த தடுப்பூசிகளில் 4300 தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருப்பதால் இன்று மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 தடுப்பூசிகள் மட்டும் போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி பகுதியில் 43 மையங்களில் இன்று காலை நூறு தடுப்பூசிகளுக்கு மட்டும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் தடுப்பூசி போடுவதற்கு முழுமையாக டோக்கன்களை கொடுக்காமல் குறைந்த அளவே டோக்கன் கொடுப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மற்றும் வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில், பாதி எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன்களை கொடுத்து விட்டு மற்ற டோக்கன்களை கொடுக்காமல், பொதுமக்களை கலைந்து போகச் சொல்லி மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்ததால் அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். 100 டோக்கன் கொடுக்காமல் குறைந்த டோக்கன் மட்டுமே கொடுப்பதாக கூறிய பொதுமக்கள் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu