தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
X

அண்ணாமலை

நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என எப்போதும் வழக்கமான செய்யும் டிராமாமை வேட்பு மனுவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என எப்போதும் வழக்கமான செய்யும் டிராமாமை வேட்பு மனுவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

எப்போதும் இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது அரசியல் கட்சிகளின் முறையாக வைத்துள்ளோம். சீரியல் நம்பர் 15, 27 ஆகிய இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்று இந்தியன் நீதித்துறை முத்திரைத்தாளிலும், இன்னொன்று நீதித்துறை சாராத முத்திரைத்தாளிலும் தாக்கல் செய்துள்ளோம். இரண்டு வேட்பு மனுக்கள் பண்ணும் போதும் குழப்பம் இருந்தது.

ஒரு தரப்பு வழக்கறிஞர் இப்படி செய்ய வேண்டும், இன்னொரு தரப்பு வழக்கறிஞர் அப்படி செய்ய வேண்டும் என்றதால், இரண்டு விதமாகவும் வேட்பு மனுத்தாக்கல் செய்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்து, இன்னொரு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல், வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. உச்சபட்சமாக இந்த முறை வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரியே விளக்கம் அளிக்கும் நிலை வந்துள்ளது. எனது வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது. சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 இரண்டும் நாங்கள் தாக்கல் செய்தது தான். அவை எப்போது பதிவேற்றினார்கள் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தான் கேட்க வேண்டும்.

வேட்பு மனுவை நிராகரிக்க இது காரணங்கள் அல்ல. நிராகரிக்க வேண்டுமென பொய்யான செய்திகளை சொல்கிறார்கள். பொய்யான செய்திகளை சொன்னால் தான் வேட்பு மனுவை நிராகரிக்க முடியும். இது போட்டி தேர்வு அல்ல. கையெழுத்தில்லை, தேதி போடவில்லை என நிராகரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளது. இதற்கு மேல் விபரங்கள் வேண்டுமெனின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!