கோவையில் கார் மோதி ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு: டிரைவர் கைது

கோவையில் கார் மோதி ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு: டிரைவர் கைது
X

கைது செய்யப்பட்ட அஜய் ராகுல்.

கோவையில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஊர்காவல் படையை சேர்ந்த பிரபு என்பவர் உயிரிழந்தார்.

கோவை பீளமேடு கொடிசியா அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊர் காவல் படை வீரர் பிரபு மற்றும் பீளமேடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊர்க்காவல்பபடை வீரர் பிரபு மற்றும் பீளமேடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் மீது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஊர்காவல் படையை சேர்ந்த 34 வயதான பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் சிறப்பு காவல் உதவியாளர் ரவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டியவர் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அஜய்ராகுல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஜய்ராகுலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!